☰
×

இன்று முதலமைச்சரின் தாராபுரம் பரப்புரை.. 5,000 பேர் மட்டுமே அனுமதி..!!

 

தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் விஜய் இன்று அந்த தொகுதியில் பரப்புரை செய்கிறார். இதற்காக, தாராபுரத்தில், சித்ராவுத்தன்பாளையம் பகுதியில், பொதுக்கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், 10 ஆயிரம் பேரை அனுமதிக்கும் வகையில், இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, 'கியூ ஆர்' குறியீட்டுடன் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி தலைமையின் எக்ஸ் பதிவில், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்களுக்கு அனுமதி இல்லை. குடிநீர், மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

பிரசார கூட்டத்தில் பங்கேற்க, சென்னையில் இருந்து தனி விமானத்தில்,  இன்று காலை கோவைக்கு முதல்வர் விஜய் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக, பிரசார திடலுக்கு சென்று, பிரசாரத்தை முடித்து விட்டு, இன்று இரவு சென்னை திரும்புகிறார்