×

எஸ்.பி.பிக்கு அரசு மரியாதை அளித்த முதலமைச்சர்- பிரபலங்கள், ரசிகர்கள் நெகிழ்ச்சி

மறைந்த ’பாடும் நிலா’ எஸ்.பி பாலசுப்பிரமணியம் நல்லடக்கம், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடக்கும் என முதலமைச்சர் எடப்பாடியின் அறிவிப்புக்கு பிரலபங்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர். திரையுலகினர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு அன்பாக இருப்பாரோ, அதை பிரதிபலிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டதாக குறிப்பிடுகின்றனர். குறிப்பாக அவரது அறிக்கையில், எம்.ஜி.ஆர். காத்திருந்து பாடல் பாட வைத்த அந்த குரலுக்கு நாங்கள் செலுத்தும் மரியாதை என தெரிவித்திருந்தார். தங்கள் கட்சி தகைவர்கள்
 

மறைந்த ’பாடும் நிலா’ எஸ்.பி பாலசுப்பிரமணியம் நல்லடக்கம், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடக்கும் என முதலமைச்சர் எடப்பாடியின் அறிவிப்புக்கு பிரலபங்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கின்றனர்.

திரையுலகினர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு அன்பாக இருப்பாரோ, அதை பிரதிபலிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்டதாக குறிப்பிடுகின்றனர். குறிப்பாக அவரது அறிக்கையில், எம்.ஜி.ஆர். காத்திருந்து பாடல் பாட வைத்த அந்த குரலுக்கு நாங்கள் செலுத்தும் மரியாதை என தெரிவித்திருந்தார்.

தங்கள் கட்சி தகைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் செலுத்திய அதே மரியாதையை அவரும் செலுத்தியது தமிழக மக்களை நன்றி கடலில் ஆழ்த்தியுள்ளது. முதலமைச்சர் வெளியிட்ட அறிகையில்,
கடந்த அரை நூற்றாண்டு காலமாக இசை ரசிகர்களை தனது குரல்வளத்தால் கட்டிப்போட்டிருந்த எஸ்.பி.பி, 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். பிறப்பால் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது வாழ்க்கைப் பயணம் பெரும்பாலும் சென்னையிலேயே மையம் கொண்டிருந்தது என இடங்கல் தெரிவித்துள்ளார்.

‘’ஆயிரம் நிலவே வா’ என்ற புகழ்மிக்க பாடலை எஸ்.பி.பிதான் பாட வேண்டும் என்று காத்திருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன். அன்னாரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் ‘தங்கத் தாரகையே வருக.. வருக.. தமிழ் மண்ணின் தேவதையே வருக.. வருக; என்ற ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல், கழக வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்’’. என உளமுருகக் கூறியிருந்தார்.

எஸ்,பி.பியின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அவர் பிறப்பித்த உத்தரவு உலகெங்கிலும் உள்ள அவரது கோடானுகோடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளங்களில் முதல்வர் எடப்பாடிக்கு அவர்கள் நன்றிகளைக் குவித்து வருகின்றனர்.

’’ எஸ்.பி.பி என்கிற மாபெரும் கலைஞரின் உன்னதமான சிறப்புகளை முழுமையாக உணர்ந்த ஒருவராலேயே இத்தகையை பெருமையை அவருக்கு அளிக்க முடியும். இதனைச் செய்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நாங்கள் என்றைக்கும் மறக்க மாட்டோம்’’ என நன்றி உணர்ச்சி பெருக்கில் நன்றி தெரிவிக்கின்றது எஸ்.பி.பியின் ரசிகர் கூட்டம்.