முதலமைச்சர் விஜய்யின் 'டாப் கியர்' ஆக்ஷன்..! கலங்கி நின்ற முத்துக்காளைக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமைச்சர்!
முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள முத்துக்காளை, முதல்வரிடம் உதவிக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதாவது, தனுடைய மனைவிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
அவருடைய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும், அரசாங்கம் சார்பில் அவருக்கு உதவிகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இதனையடுத்து முத்துக்காளை மனைவியின் மேல் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தவெக அமைச்சர் ராஜ்மோகன் மருத்துவமனையில் உள்ள முத்துக்காளையை நேரில் சந்தித்து பேசியுள்ளார். மருத்துவ தேவைகள், சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தவர் அரசின் சார்பாக உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். அதோடு முத்துக்காளைக்கு ஆறுதல் சொல்லி, அவருடைய குடும்பத்தினரையும் சந்தித்து பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். இதன் மூலமாக அரசின் சார்பில் தேவையான உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை முத்துக்காளைக்கு கிடைத்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக மனைவியின் உடல்நிலை குறித்த கவலையில் இருந்த முத்துக்காளைக்கு, ராஜ்மோகனின் சந்தித்தது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.