×

பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!

 

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக சட்டசபையில் நேற்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இந்த தீர்மானம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது :

தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை குறித்து தமிழகசட்டசபையில் நடந்த விவாதங்கள் குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இது தொடர்பாக, சட்டசபையில் ஆக., 12 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.லோக்சபா எம்பிக்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர வேண்டும்.

மாநிலங்களின் தற்போதைய பார்லிமென்ட் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும், லோக்சபாவுக்கும் ராஜ்யசபாவுக்கும் இடைபோன விகிதத்தைப் (2.2: 1) பேண வேண்டும். இதற்காக 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வரும் லோக்சபா தேர்தலில் இருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.அரசியலமைப்பின் 81(2(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் 1967ல் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 30-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென் மாநிலங்கள் தங்களின் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்திய தென் மாநிலங்களுக்கு, எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.