×

இன்று மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்..! 

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.

இதனால் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக, அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.47 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 935 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

இதற்காக, நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார்.பின்னர் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் விஜய் சேலம் வருகையை ஒட்டி, மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் விஜய் வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.