×

வரும் செப்.01-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்..!

 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பொய்த்து போன மழை மற்றும் கர்நாடகா நீர் திறக்காதது உள்ளிட்ட காரணங்களால், அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.

இதனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த சூழலில், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதனால், இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 88.84 அடியாகவும், நீர் இருப்பு 51.33 டிஎம்சி ஆகவும் உள்ளது.

இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. சட்டசபையில் அமைச்சர் ஆனந்த், 'விரைவில் நல்ல செய்தி வரும்' என்று கூறினார். அமைச்சர் செங்கோட்டையன், 'இன்னும் தேதி முடிவு செய்யவில்லை' என்றார்.இந்நிலையில் செப்., 01 ம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்துவைக்க உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துஉள்ளார். செப்.,01ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

காவிரி படுகையில் போதிய மழை இல்லாத நிலையிலும் பாசன தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது எனத் தெரிவித்து உள்ளார்.இன்று காலை மேட்டூர் அணையின் வலது கரை பகுதியில் நீர் திறக்க உள்ள இடத்தை சேலம் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி சேலம் டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமனி, எஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அணை பொறியாளரிடம் ஆலோசனைகளை வழங்கினர்