2 எம்எல்ஏக்களை எச்சரித்த முதலமைச்சர் விஜய்!
துணை சபாநாயகர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி எம். எல். ஏ. அருள் விக்னேஷ் இருவரையும் முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் இருவரையும் கடைசியாக சந்தித்த நிலையில், எச்சரித்து அனுப்பியுள்ளார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பாக, தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய நபர் ஒருவரை தவெக எம்.எல்.ஏ. ரவிசங்கர் தாக்கிய விவகாரம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த விசாரணையைத் தவெக மேற்கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொதுவெளியிலும் தங்களது தொகுதிகளிலும் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மாமல்லபுரம் தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தவெக தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்எல்ஏக்கள் ரவிசங்கர், அருள் விக்னேஷிடம் முதல்வர் விஜய் தனியாக பேசினார். ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது. மனு அளிக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது.