ஒன்றிய அரசை ''இந்திய அரசாக'' மாற்றினார் முதலமைச்சர் விஜய்
Jun 25, 2026, 17:22 IST
மத்திய அரசை இதுநாள் வரை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வந்த முதலமைச்சர் விஜயின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் செய்துள்ளார்.
மத்திய அரசை இதுநாள் வரை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வந்த முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் செய்துள்ளார். மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை என கூறிய நிலையில், இனி இந்திய அரசு என குறிப்பிட முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் என்.எல்.சி. பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு இந்திய அரசானது. பிரதமர் மோடிக்கு கடந்த காலங்களில் எழுதிய கடிதங்களிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என விஜய் கூறிவந்தார். மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடிக்கப்போவதில்லை என சட்டப்பேரவையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.