நினைத்ததை முடித்த விஜய்.. சென்னைக்கு 3 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு
Oct 13, 2026, 20:41 IST
இன்று ஆந்திர முதலமைச்சரிடம் பேசி தண்ணீரைப் பெற்றிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விஜயவாடாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் விஜய். காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்குவோம். நடப்பாண்டில் சென்னைக்கு இதுவரை 4.08 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளது. நீர் விவகாரத்தில் Conflict வேண்டாம். Cooperation மட்டுமே தேவை. சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் 3 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.