மூத்த தலைவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற முதல்வர் விஜய்!
நூறு வயதை எட்டிய MGR அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அரசியல் ஆளுமைகளான முன்னாள் அமைச்சர்கள் ஹெச்.வி.ஹண்டே, சுவாமிநாதன் ஆகியோர் காலில் முதல்வர் விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
நூற்றாண்டைக் காணும் மூத்த அரசியல் ஆளுமைகளான முன்னாள் அமைச்சர்கள் திரு. V.V. சுவாமிநாதன் மற்றும் டாக்டர் H.V. ஹாண்டே ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்ற நம் அண்ணன் மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் பணிவு போற்றத்தக்கது!
— TVK priyanga (@priyanga_tvk) November 27, 2026
மூத்தவர்களை மதிக்கும் பண்பும், அவர்களின்… pic.twitter.com/8HRo1hmFTN
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வி.வி. சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி. ஹாண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை TNLA அமைப்பு ஏற்பாடு செய்தது. இருவருக்கும் முதலமைச்சர் விஜய், பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் வயதில் மூத்த அந்த தலைவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்நிகழ்வின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கையொப்பமிட்ட அரிய 100 ரூபாய் நோட்டை வி.வி. சுவாமிநாதன் முதல்வர் விஜய்யிடம் நினைவுப் பரிசாக வழங்கினார்.