இன்று விசாரணைக்கு வருகிறது முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு..!
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு.
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, தமக்கு விவாகரத்து கோரி கடந்த 2025ம் ஆண்டு டிச.24ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டும் என்று சங்கீதா கோரியிருந்தார். இந்த வழக்கானது பிப்.26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வருகிறது.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது விஜய் மற்றும் சங்கீதா நேரிலோ, இன்கேமரா முறையிலோ ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் அவரின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக பொறுப்புகளை கருத்தில் கொண்டு, அவர் இவ்வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நீதிபதி விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிகிறது.
தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா அளித்த மனுவில்
'கடந்த 1998 ஆம் ஆண்டு தனக்கும் விஜய்க்கும் பதிவு திருமணம் நடந்தது. பிறகு 1999 ஆம் ஆண்டு சென்னையில் முறையாக திருமணம் நடைபெற்றதாகவும் தங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், 'தங்களின் திருமண வாழ்க்கையின் ஆரம்ப காலம் அமைதியாக இருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீதிய உறவில் இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
இதுதொடர்பாக பலமுறை சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்வு எட்டப்படவில்லை என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது' எனவும் சங்கீதா தமது மனுவில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.அத்துடன், 'தனது கணவருக்கு நடிகை ஒருவருடன் தவறான உறவுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான சர்ச்சைகள் தமக்கும் தங்களது குழந்தைகளுக்கும் பெறுத்த அவமானத்தை ஏற்படுத்தியிருந்தது.எனவே தனக்கும் தனது கணவர் விஜய்க்கும் ஆன திருமணத்தை ரத்து செய்துவிட்டு விவாகரத்து வழங்க வேண்டும்; நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் வசிக்கும் உரிமை அல்லது மாற்று வசதி மற்றும் நிரந்தர பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என சங்கீதா அளித்த அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.