அமித்ஷா முன்னிலையில் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிய முதல்வர் விஜய்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிய முதல்வர் விஜய்
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையில் தற்போதைய எண்ணிக்கை மாறக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்திருந்த முதல்வர் விஜய் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடந்த தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் மாறக்கூடாது என கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் No Delimitation என சொல்லிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் Fair Delimitation என தனது வாக்கையும் வார்த்தையையும் அப்படியே தலைகீழாக மாற்றி இருக்கிறார் முதல்வர் விஜய்.
ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!
— DMK IT WING (@DMKITwing) August 20, 2026
தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை… pic.twitter.com/7Zq9d2YX0C
இதற்கு கண்டனம்தெரிவித்துள்ள திமுக தனது ஐடி விங் எக்ஸ் பக்கத்தில், “ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா? கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.