×

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தனிப்படை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு- ஆதவ் அர்ஜூனா

 

போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின்  நோக்கம் என  அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “கல்வராயன் மலையில் கள்ளச்சாரயம் ஒழிக்கப்படும். கள்ளச்சாரயத்தை ஒழிக்க தனிப்படை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மதுபோதை பழக்கம் அதிகரித்துள்ளது. கல்வராயன் மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு பயிற்சி மைதானம், பயிற்சி மாணவர்களுக்கான விடுதி அமைக்கப்படும். போதைப் பழக்கத்திற்கு செல்வதை தடுக்க இளைஞர்கள் விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டினாலே போதை கலாச்சாரம் ஓரளவு ஒழிந்து விடும். போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே முதல்வரின் நோக்கம்” என்றார்.