×

“பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு

 

பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “2,000 AC பேருந்துகளை உடனடியாக வாங்க வேண்டும். புதிய குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை காரணமாக கொண்டு பயணிகளின் பேருந்து கட்டணத்தை எந்த சூழலிலும் உயர்த்தக்கூடாது.  பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்துகளில் விளம்பரம் உள்ளிட்டவை மூலம் வருவாயை பெருக்க வேண்டும். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து பயணச் சீட்டில் தனியார் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன” என்பதை சுட்டிக்காட்டி பேசினார்.