×

“சாப்பாடு நல்லா இருக்கா?”- விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாணவர் விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வை முடித்து புறப்பட்டார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்சி ராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் உள்ள வசதிகள், உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து விடுதியில் 20 நிமிடங்கள் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்,  மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சரிடம் மாணவர்கள் புகார்களை அடுக்கினர். விடுதியில் கொசுத்தொல்லை இருப்பதாகவும், வார்டன்கள் இழிவாக பேசுவதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், கழிவறை சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் மாணவர்கள் புகார் கூறினர். உணவில் வண்டுகள், பூச்சிகள் இருப்பதாக கூறிய மாணவர்கள், போட்டி தேர்வுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் தாமதமாக வந்தால் அனுமதிப்பதில்லை. விடுதிக்குள் அனுமதிக்க மறுப்பதால் கொசுக்கடியில் தூங்க நேரிடுவதாக குற்றஞ்சாட்டினர். மாணவர்களின் புகாரை தொடர்ந்து விடுதி காப்பாளரை முதல்வர் விஜய் அழைத்து விசாரித்தார்.