விஐபி பாதையை தவிர்த்து பயணிகளுடன் பயணியாக லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய்..!
முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக நேற்று இரவு லண்டன் புறப்பட்டார்.
அவருடன் முதலமைச்சரின் சிறப்பு அலுவலர் விஷ்ணு ரெட்டி, தனிச்செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்., கூடுதல் செயலாளர் விஷ்ணு ஐ.ஏ.எஸ். மற்றும் உதவியாளர்கள் ராஜேந்திரன், ராம்குமார் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பயணத்தின்போது தொழில் முதலீடுகள் தொடர்பான சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையம் வரும் அவர் விமான நிலையத்தில் அவருக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. முதலமைச்சர் உள்பட முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்தில் இருந்து கேட் 6 வழியாக செல்வார்கள்.
ஆனால் இந்த சிறப்பு பாதை முதலமைச்சர் தவிர்த்து சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் செல்லும் வழியில் செல்ல முடிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சர்வதே முனையத்தில் புறப்பாடு பகுதியில் உள்ள 9 வது நுழைவு வாயில் வழியாக முதலமைச்சர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் செல்ல சென்னை விமானநிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி ஹெர்டின் சைகையை காட்டினார்.