×

சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்..!

 

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க அரசு முறை பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று மதியம் 1 மணியளவில் தலைநகரை சென்றடைந்த அவர், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு முதலில் சென்றார். அங்கு அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள காவலர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

பின்னர் பிரதமர் மோடி இல்லத்தில் அவரை சந்தித்த முதலமைச்சர் விஜய், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

குறிப்பாக, மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் என பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த சந்திப்பானது ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் விஜய் டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.