×

தவெக MLA பேச்சை கேட்டு சிரித்த முதல்வர் விஜய்..! 

 

தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், “அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார், வாகன படி, உதவியாளர் படி வழங்கப்படும்” என அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சண்முகம், “கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கிற உறுப்பினர்கள் சொல்கின்றனர்” என பேச சபையில் முதல்வர் விஜய், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உட்பட அனைவரும் சிரித்தனர்.    


சட்டமன்றத்தில் பேசிய பெரியகுளம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சபரி அயங்கரன், தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில் தனது கல்லூரிப் பருவ நினைவுகளையும் தற்போதைய சூழலையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "எனது கல்லூரி காலத்தில் வேலையும் இல்லை, சொந்தமாக காரும் இல்லை என்பதால் எனக்குக் காதல் தோல்வி ஏற்பட்டது. ஆனால், இப்போது எனது தலைவர் எனக்கு வேலையையும் வழங்கி இருக்கிறார். முதலமைச்சர் தற்போது காரையும் வழங்கி இருக்கிறார். நான் தேனியிலிருந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும்போதெல்லாம் ரயிலில் வருகிறேன். மேலும், ரயில் மற்றும் ஆட்டோவில் தலைமை செயலகத்திற்கு தான் வந்து சென்றதாகவும், அந்த சிரமத்தை தற்போது முதல்வர் இந்த அறிவிப்பினால் போக்கியதாகவும் அவர் கூறினார்.

சிரிப்பலையில் சட்டமன்றம்..என்னிடம் கார், வேலை இல்லாததால் காதல் தோல்வி அடைந்தேன்.! #tnassembly #tvk #cmvijay #vijayspeech #tvkgovernment #naadhasmedia pic.twitter.com/paON19Bt1J

— Naadhas Media (@NaadhasMedia) August 19, 2026

சிரிப்பலையில் சட்டமன்றம்..என்னிடம் கார், வேலை இல்லாததால் காதல் தோல்வி அடைந்தேன்.! #tnassembly #tvk #cmvijay #vijayspeech #tvkgovernment #naadhasmedia pic.twitter.com/paON19Bt1J

— Naadhas Media (@NaadhasMedia) August 19, 2026