முதல்வர் விஜய் அதிரடி வார்னிங்! அமைச்சர் பெயரை சொல்லி லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை
தமிழக தலைமைச் செயலகத்தில் 29.10.2026 அன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் உதவியாளர் (PA) என்று சொல்லிக் கொண்டு, அமைச்சரின் உறவினர், நண்பர் என்று சொல்லிக் கொண்டு, அமைச்சர் பெயரை பயன்படுத்தி, டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட், பணி நியமனம், டெண்டர் என லஞ்சம் வாங்கும் கும்பல் அதிகமாகி விட்டது. இதனால் அமைச்சர்களுக்கே தெரியாமல், அவர்கள் பெயரை வைத்து கீழேப ஊழல் நடப்பதாக முதல்வருக்கு பல புகார்கள் போயுள்ளது. இதை கேள்விப்பட்ட முதல்வர் விஜய் மிகவும் கோபமடைந்து, நேரடியாக வார்னிங் கொடுத்துள்ளார்.
அமைச்சர்களின் பெயர்களை பயன்படுத்தி, அவர்களது உதவியாளர்களோ அல்லது உறவினர்களோ லஞ்ச ஊழலில் ஈடுபடக்கூடாது. அப்படி மீறினால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளார். உதவியாளர் லஞ்சம் வாங்கினாலும், அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு. முதல்வர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக உளவுத்துறை மூலம் அனைத்து அமைச்சர்களின் PA-க்கள், உறவினர்கள் கண்காணிக்கப்படுவார்கள். புகார் வந்தால் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை, பதவி நீக்கம் வரை போகும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.