விருதுநகருக்கு செல்லும் முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா?
செப்டம்பர் 17ம் தேதி முதலமைச்சர் விஜய் விருதுநகரில் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்யவுள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டம் கடந்த, 2022, - செப்.,15ல், அப்-போதைய திமுக அரசால் துவங்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, தவெக அரசு இத்திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காம-ராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றி விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, ஈ.வெ.ரா. பிறந்த நாளான செப்17- முதல், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
இத்திட்டத்திற்கு பெயர் மாற்றியதோடு காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் படித்த கேவிஎஸ் நடு நிலைப்பள்ளியில் வைத்து திட்டத்தை முதல்வர் விஜய் துவக்குகிறார். அதே போல சுப்பையா நாடார் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் இந்நிகழ்விற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறார் கலெக்டர் சுகபுத்ரா. முதல்வர் ஜோசப் விஜய் நேரில் வருவதால் பாதுகாப்பு பணிகள் மற்றும் துவக்கவிழா ஆய்வுப்பணி என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பரபரப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்நிகழ்வு செப்டம்பர் 17ம் தேதி விருதுநகரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.