×

“முதல்வர் விஜயின் மனம் கடுமையாக புண்பட்டிருக்கிறது”- காதர் மொய்தீன்

 

உதயநிதி பேச்சு கண்டனத்திற்குரியது என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மீது அநாகரிக வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி, பண்பாடற்ற முறையில் உதயநிதி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் விஜயின் மனம் புண்படும்படி உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகளை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. வள்ளுவர் வழிநின்று நாடாண்ட கலைஞர் குடும்பத்தில் இருக்கும் உதயநிதி உதிர்த்திருக்கும் தரமற்ற சொல் பிரயோகம், கலைஞர் புகழையும், பெயரையும் கெடுக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.