×

போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் விஜய் ஆய்வு 

 

போரூர் - வடபழனி வழித்தடத்தில் தொடங்கப்படவுள்ள ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் முதலமைச்சர் விஜய்.


தமிழக முதல்வர் விஜய், ஓமந்தூரார் தோட்டம் முதல் நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் தானே டிக்கெட் எடுத்து பயணித்தார்.அங்கு சக பயணிகளுடன் மகிழ்ச்சியாகக் கலந்துரையாடிய அவர், மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டார். அதன்பின் போரூர் - வடபழனி வழித்தடத்தில் தொடங்கப்படவுள்ள ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் முதலமைச்சர் விஜய்.

முன்னதாக கிண்டி கத்திப்பாரா பாலத்திற்கு மேல் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் விஜய். பாலத்தின் உச்சியில் நின்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், தன்னை காண கீழே திரண்டிருந்த பொதுமக்களை பார்த்தும் கையசைத்தார்.