#BREAKING தனது முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் முதல்வர் விஜய் ஆய்வு
தனது முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த சட்டமன்றதேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான பிறகு விஜய், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். சென்ளை பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சில சமயங்களில் மட்டுமே அலுவலக வேலைக்காக சென்று தங்கி வருகிறார். அதை அவர் முகாம் அலுவலகமாக பயன்படுத்துகிறார். நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வருவது நீண்ட நேர பயணமாக உள்ளது.
வரும் வழியில் பல இணைப்பு சாலைகள் உள்ளன. எனவே அந்த பகுதிகளை கடக்கும் போது, பாதுகாப்பு அளிப்பதற்காக சாலை போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தன்னால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. எனவே தலைமைச் செயலகத்துக்கு அருகே தங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பாமணி இல்லத்தை, முதல்வர் விஜயின் முகாம் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகின்றது.
சற்று முன் 🔔 : டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் புனரமைக்கப்பட்டு வரும் தனது முகாம் அலுவலகத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார் ! pic.twitter.com/un2D0LjoKp
— JB 🕊️ (@jeba_of) October 27, 2026
இந்நிலையில் சென்னை தொல்காப்பியப் பூங்கா எதிரே, டிஜிஎஸ் தினகரன் சாலையில் புனரமைக்கப்பட்டு வரும் தனது முகாம் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிட்டார்.