×

#BREAKING போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

 

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.

ஜூன் மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பாலவாக்கம் ஆதி திராவிடர் அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். நாடு முழுவதும் வரும் வரும்  28ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் மற்றும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.