×

தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

 

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரிக்கும் சூழலில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை செய்துவருகிறார்.

தமிழ்நாட்டின் மின் தேவை மற்றும் மின் உற்பத்தி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில்துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடி, நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் மின்கட்டண மாற்றங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்தும் தமிழ்நாட்டில் மின்சார தேவை, மின் விநியோகம் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை செய்துள்ளார். அதேபோல் 200 யூனிட் கட்டணமில்லா மின்சார திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.