×

சட்டம், ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை

 

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் முதலமைச்சர் விஜய். இக்கூட்டத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என கர்ஜித்துவந்த விஜய், பதவியேற்றபின் முதன்முதலாக தலைமைச் செயலகம் சென்று, சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசித்தார். ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றார். கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம், ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.