இனி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் - முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு..!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியை பார்வையிட கார் வேண்டுமென கடந்த வாரம் வேண்டுகோள் வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிவிப்பில், “மக்களாட்சியின் மிக முக்கிய தூண்களாக விளங்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். சட்டப்பேரவையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொருளாதார வளம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணிகளை திறம்பட செயல்படும் வகையிலும் அவர்களின் வசதிக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம். அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் வகையில் வாகனத்திற்கு ஓட்டுநர் நியமித்து, வாகன எரிபொருள், வாகன பராமரிப்புக்காக ரூபாய் 75 ஆயிரம் வாகனபடியாக வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும்” என்ற சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.