☰
×

எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் முதலமைச்சர் விஜய்..!!

 

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதல்வர் விஜய்..ஆர்ப்பரித்த தொண்டர்கள்

மதுராந்தகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், இதற்காக ஆத்தூர் பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பிரச்சாரம் காரணமாக ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன. 

மதுராந்தகத்தில் முதல்வர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆனால் ஏராளமான தொண்டர்கள் உள்ளே வர முயன்றதால், அங்கு அமைக்கப்பட்ட தடுப்புகள் தகர்க்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால் தற்போது பாஸ் இல்லாதவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுராந்தகம் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அந்த தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமாரவேல் அருகில் இருந்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடி உற்சாகமாக முழக்கமிட்டனர்.

 விஜய் வருகை தந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டனர். 'தளபதி... தலைவர்...' என அவர்கள் எழுப்பிய ஆரவார முழக்கங்களால் அப்பகுதியே பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காட்சியளித்தது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/az3iUPmJjU0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/az3iUPmJjU0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">