#JUST IN : சினிமாவில் இருந்து நேராக வரவில்லை - முதலமைச்சர் விஜய்..!!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார்.நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆசைப்படும் மொழியில் சொல்கிறோம். அது வெறும் ரீல் தான் ரியல் இல்லை என்றார்.எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்று நிரூபிக்க முடியும் என நினைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும் என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார்.
பெரியார் சொன்னதிலே ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம். அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்று அறிவித்தோம். நமக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று அறிவித்தோம். பெண் கல்வி, சமூக நீதி என இப்படி பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தோம். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவோம் என்று அறிவித்தோம். பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்தோம் என்றார்.
சினிமாவில் இருந்து நேராக வரவில்லை - முதலமைச்சர் விஜய் :
- ரசிகர் மன்றமாக இருக்கும்போது மக்களுக்கு துணையாக இருந்தோம். 1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தோம்.
- 2008-இல் ஈழத்தமிழர் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்தோம்.போர் முடிவுக்கு வரவேண்டும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றே கோரிக்கை வைத்தோம். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் துணையாக இருந்தோம் என்றார்.
- 2009 மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தோம்
- திரைப்படங்களில் சமூகநீதி ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவர்களை கூறினோம்
- 2011-இல் மீனவர்கள் ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம்
- ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்
- ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நேரடியாக சென்று என்னுடைய ஆதரவை தெரிவித்தோம்
- கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கினோம்
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல்
- என பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தோம் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார்.