இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் விஜய் பாராட்டு..!!
முதல்வர் விஜய் வாழ்த்து பதிவு:
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
யார் இந்த இளவேனில் வாலறிவன்?
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் (10 மீ., 'ஏர் ரைபிள்') இந்திய வீராங்கனை இளவேனில், இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இளவேனில் வாளரிவன் 27, தமிழகத்தின் கடலுாரில் பிறந்தவர். குஜராத் பல்கலையில் பயின்ற இளவேனில், ஆசிய சாம்பியன்ஷிப், உலக கோப்பை, உலக கோப்பை பைனல், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நிறைய பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பதக்கம் கைப்பற்றிய இளவேனில், இரண்டு முறை (2020, 2024) ஒலிம்பிக்கில் பங்கேற்றார். கடந்த 2022ல் இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.