மேலாளர் ஜெகதீஷ் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய்..!
விஜயின் மேலாளர் ஜெகதீஷ் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டையில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்.இன்று சென்னை நீலாங்கரையில் தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தமிழக முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் இல்ல (புதுமனை புகுவிழா) நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அவர் பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி-சட்டை அணிந்து வருகை தந்தார்.
இன்று சென்னை நீலாங்கரையில் தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜோசப் விஜய்.#CMJosephVijay #TVKVijay #jagadeesh pic.twitter.com/mmYnhlERcD
— Top Tamil News (@toptamilnews) May 29, 2026
தமிழகத்தில் ஆட்சியை பிடித்த விஜய், எப்போதும் தமிழக அரசியல் தலைவர்கள் உடுத்தும் வெள்ளை வேட்டி சட்டைக்கு பதிலாக கருப்பு கோட் சூட் அணிந்து பதவிபிரமாணம் ஏற்றுக்கொண்டார்.மேலும் பிரதமரை சந்திக்கும் போதும் கருப்பு கோட் சூட்டிலேயே டெல்லிக்கு சென்றிருந்தார். அந்த வகையில் கருப்பு நிறம் அதிகாரம், ஆளுமை, தனித்துவம் ஆகியவற்றை குறிப்பதாக கூறப்படுகிறது. எனவே முதலமைச்சர் விஜய் இந்த உடையை விரும்பி தேர்வு செய்ததாக தகவல் வெளியானது.
தலைமைச் செயலகத்திற்கு பட்டு வேட்டி சட்டையில் வந்த முதல்வர் விஜய்: பின்னணி என்ன?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் எப்போதும் கருப்பு நிற கோட்-சூட் உடையில் வலம் வந்த விஜய், இன்று முதன்முறையாக பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை அணிந்து தலைமை செயலகத்திற்கு வருகை தந்தார். வழக்கமான மேற்கத்திய ஆடையில் மிரட்டும் முதல்வரை, திடீரென தூய தமிழ் உடையில் பார்த்த அரசு அதிகாரிகள் முதல் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வரை அனைவரும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் பார்த்தனர். இந்தத் திடீர் ஆடை மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் இன்று காலை தனது நெருங்கிய நண்பரும், மேனேஜருமான ஜெகதீஸின் புதுமனை புகுவிழா (கிரகப்பிரவேசம்) நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'The Root' என்ற பிரபல டிஜிட்டல் பிராண்டிங் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெகதீஸ் இல்ல விசேஷத்திற்காகவே, முதல்வர் விஜய் இந்தத் தனித்துவமான பட்டு வேட்டி, சட்டை உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து சென்றுள்ளார்.
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அங்கிருந்து ஆடையை மாற்றி கொள்ளாமல் அதே பாரம்பரிய உடsignal-உடன் முதல்வர் விஜய் நேரடியாகத் தலைமை செயலகத்திற்கு தனது அரசுப் பணிகளை மேற்கொள்ள வந்துள்ளார். இதன் காரணமாகவே, எப்போதும் கோட்-சூட்டில் காட்சியளிக்கும் முதலமைச்சர், இன்று பட்டு வேட்டி சட்டையில் தலைமை செயலகத்திற்கு வர நேரிட்டது என்ற பின்னணி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.