×

ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் அறிவித்தார் முதல்வர் விஜய்..! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? 

 

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும். அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கத்தின் சிறப்புப் அதிரடி படை திட்டம் உருவாக்கப்பட்டது. தாய் மாமன் தங்க மோதிரம், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம், அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நமது அரசு, மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை பெற்று செயல்படுத்தி வருகிறது. இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள் அடுத்து வரும் முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டு திட்டத்திற்குள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

வளைக்குடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணத்தினாலும், விலைவாசி உயர்வு காரணத்தினாலும், மக்களிடையே சிரமமான சூழல் நிலவி வருகிறது. பொதுமக்கள் வருவாய் அதிகம் செலவு ஆகிறது. இதனை கருத்தில் கொண்டு, நிதி நெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. எரிவாயுவிற்க்கான மக்கள் செலவு செய்த தொகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடம் பட்டியல் பெற்று பயணாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இதன் மூலம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு குறு விவசாய குடும்பத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.