×

ரூ.5000 ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு!

காவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று உலக அளவில் மட்டுமல்ல இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாக அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர்
 

காவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உலக அளவில் மட்டுமல்ல இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாக அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவலர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக 58 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையை சேர்ந்தவர்கள் ரூ.5000 முதலமைச்சர் ஊக்கத்தொகையை பெற்று பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது .