×

நீரஜ் சோப்ராவிற்கு முதல்வர் ஸ்டாலின்  வாழ்த்து

 

நீரஜ் சோப்ராவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில்   கடந்த 9 நாட்களாக  நடைபெற்று வந்த நிலையில் இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள் உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர். இதில்  இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.