சத்யம் டிவி செய்தியாளர் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Sep 29, 2023, 11:52 IST
சத்யம் டிவி தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர் அலெக்ஸாண்டர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "சத்யம் டிவி தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக 12 ஆண்டுகளாக பணியாற்றியும், ஊடகத் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவருமான திரு. அலெக்ஸாண்டர் அவர்கள் (வயது 46), நேற்று (28.09.2023) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
திரு. அலெக்ஸாண்டர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.