கருணாநிதி நினைவிடத்தில் மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
50வது திருமண நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஆகியோர், இன்று தங்களது 50வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். 50வது திருமண நாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ம.நீ.ம., தலைவர் கமல், இந்திய கம்யூ., மாநில பொதுச் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, முதல்வரின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு ஆகியோர் நேற்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.