×

முதல்வர் பழனிசாமியின் 6 ஆம் கட்ட பரப்புரை : முழு விவரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்வர் பழனிசாமி 6 ஆம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் ஒருபுறம் வேகமாக செய்து வருகிறது. அதே போல் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாராத்தை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர்
 

சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்வர் பழனிசாமி 6 ஆம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் ஒருபுறம் வேகமாக செய்து வருகிறது. அதே போல் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாராத்தை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர் அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 17 ஆம் தேதி முதல் 6 ஆம் கட்ட பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறார். அதன்படி பிப்ரவரி 17ம் தேதி பிப்ரவரி தூத்துக்குடியிலும் 18, 19 தேதிகளில் திருநெல்வேலி மற்றும் தென்காசியில் பிரசாரம் முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.இதுவரை முதல்வர் பழனிசாமி சேலம், வேலூர், திருப்பத்தூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.