×

ஊரடங்கு போடலாமா? முதல்வர் திடீர் ஆலோசனை!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 5,989 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 26ஆயிரத்து 816ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 23 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12,886 ஆக அதிகரித்துள்ளது.இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட
 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 5,989 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 26ஆயிரத்து 816ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 23 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12,886 ஆக அதிகரித்துள்ளது.இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம். இதனால் முதல்வர் பழனிசாமி கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவுள்ளார்.