×

ஜெயலலிதா வளாகத்தில் மரக்கன்று நட்டார் முதல்வர் பழனிசாமி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் புகைப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதே போல, மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார்கள். இதனிடையே, அதிமுக தலைமையும் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட பலத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகத்தையும், அறிவுசார் பூங்காவையும் இன்று திறக்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் புகைப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதே போல, மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார்கள். இதனிடையே, அதிமுக தலைமையும் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட பலத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகத்தையும், அறிவுசார் பூங்காவையும் இன்று திறக்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஜெயலலிதாவின் ஆசியுடன் இன்றே சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட ஓபிஎஸ் – ஈபிஎஸ் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் படி, இன்று காலை முதல்வர் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து அதிமுக தலைமை செயலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா வளாகத்திற்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நாடும் திட்டத்தை தொடக்கிவைத்தார். மேலும், அங்கு ஒரு மரக்கன்றை தனது கரங்களால் முதல்வர் பழனிசாமி நட்டு வைத்தார்.