×

முதல்வர் பழனிசாமி பல்லடம் , உடுமலையில் இன்று தேர்தல் பரப்புரை!

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி 2-வது நாளாக இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக – அதிமுக என இரு பிரதான கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரையில் முதல்வர் பழனிசாமியே களமிறங்கியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வரும் அவர் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார். அதேபோல் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ள அவர், அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகளை
 

திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி 2-வது நாளாக இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக – அதிமுக என இரு பிரதான கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரையில் முதல்வர் பழனிசாமியே களமிறங்கியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வரும் அவர் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார். அதேபோல் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ள அவர், அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகளை வெளியிட காத்திருக்கிறார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் , உடுமலை பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். காலை 9.50 மணிக்கு உடுமலை பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, காலை 11.50 மணிக்கு பல்லடத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் மதியம் 12.25 மணிக்கு மகளிர் சுயஉதவி குழுவினருடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகிறார்