×

பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், ரூ.118.46 கோடி செலவில் 1,143 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் இணைப்பு திட்டத்தையும், ரூ.60 லட்சம் மதிப்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நவீன சிகிச்சை மையத்தையும், ரூ.45 கோடி செலவில் 21 மாவட்டங்களில் 25 தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களையும், ரூ.73.71 கோடி செலவில் சென்னை நந்தனத்தில் வணிகவரி, பதிவுத்துறை கட்டடத்தை முதல்வர் தொடக்கி
 

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில், ரூ.118.46 கோடி செலவில் 1,143 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் இணைப்பு திட்டத்தையும், ரூ.60 லட்சம் மதிப்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நவீன சிகிச்சை மையத்தையும், ரூ.45 கோடி செலவில் 21 மாவட்டங்களில் 25 தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களையும், ரூ.73.71 கோடி செலவில் சென்னை நந்தனத்தில் வணிகவரி, பதிவுத்துறை கட்டடத்தை முதல்வர் தொடக்கி வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை – நந்தனத்தில் ரூ.73.17 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டடம், இராஜபாளையம், பழனியில் ரூ.7.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடம், மதுரை வணிகவரி அலுவலக கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள 3 மின்தூக்கிகள் ஆகியவற்றை திறந்து வைத்தேன்”என குறிப்பிட்டுள்ளார்.