×

விடுதலையாகும் சசிகலா…டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். கொரோனா காரணமாக மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.7500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதே சமயம் மத்திய அரசு சார்பில் சிறப்பு நிதியாக ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை அதேபோல் முனிவர் உறவினர்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. இது
 

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.

கொரோனா காரணமாக மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.7500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதே சமயம் மத்திய அரசு சார்பில் சிறப்பு நிதியாக ரூ. 9 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை அதேபோல் முனிவர் உறவினர்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தவிர அத்திக்கடவு -அவினாசி, கோதாவரி – காவிரி உள்ளிட்ட நீர்வள திட்டப் பணிகளுக்கும் தமிழக அரசுக்கு நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில் பல்வேறு திட்டங்களுக்காக தமிழக அரசுக்கு ஒதுக்கியுள்ள நிதியை கொடுக்க வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி இன்று 11:55 மணிக்கு டெல்லி செல்ல இருக்கிறார். இன்று மாலை டெல்லி சென்று அடையும் அவர் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். அவருடன் தொகுதி பங்கீடு, தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கவுள்ளார். அதேபோல் சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலா குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாளை அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவை நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.