×

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா: 15 ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை மறுநாள் அதாவது 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்தே தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் தெரியவரும்.