×

ரமலான் நோன்புக்கு பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவு 

 

புனித ரமலான் மாதத்தை ஒட்டி நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். மாலையில் நோன்பு முடியும் நேரத்தில் மக்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சி ஊற்றுவது வழக்கம். இதற்காக முந்தைய அரசு 5,440 மெட்ரிக் டன் பச்சரிசியை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு வழங்கியது..  இந்நிலையில் புனித ரமலான் மாதத்தை ஒட்டி நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 8,700 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பெற்று பள்ளிவாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதிகளை வழங்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதல்வர் அறிவித்து உள்ளார். இதனால் அரசுக்கு 20 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.