"உங்களது தலைமைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது" - மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
Apr 3, 2024, 11:42 IST
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டுக்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, அறிவாற்றல் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய கலவையான செயல்பாடுகள் மூலமாக கட்சிகள் கடந்து மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். நான் உட்பட பலருக்கும் உங்களது தலைமைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது.