×

இன்று ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை  தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

 

புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடை​பெறும் அரசுநலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி,​முடிவுற்ற பணி​களைத் தொடங்கி வைக்​கிறார். பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை​யும் வழங்​கு​கிறார்.

தமிழகத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்த, வீடு​களில் உள்ள முதி​ய​வர்​கள் மனம் சோர்​வடையாமல் ஊக்​கம் பெற உதவும் வகை​யில் ‘அன்​புச்​ சோலை’ என்ற புதிய திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. திருச்​சி​யில் இன்று பகல் 12.30 மணி அளவில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் இந்த புதிய திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைக்​கிறார். இதற்​கான ஏற்​பாடு​கள் தயா​ராக உள்​ளன.

இந்த திட்​டத்​தின்​கீழ் தொடங்​கப்​படும் ‘அன்​புச்​சோலை - முதி​யோர் மனமகிழ் வள மையங்​கள்’ திட்​டம் மூத்த குடிமக்​களின் ஆரோக்​கிய​மான வளர்ச்​சி​யில் கவனம் செலுத்​தும் வகை​யில் சமூக மையங்​களாக செயல்​படும் என அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் மதுரை, கோவை, திருச்​சி, சேலம், திருப்பூர்​, ஈரோடு, தூத்​துக்​குடி, வேலூர், தஞ்​சாவூர், திண்​டுக்​கல் ஆகிய 10 மாநக​ராட்​சிகளில் தலா 2 மையங்​கள், தொழில் துறைமாவட்​டங்​களான ராணிப்பேட்​டை, கிருஷ்ணகிரி, சென்னைமாநக​ராட்​சி​யில் தண்டையார்​பேட்​டை, சோழிங்​கநல்​லூர், விரு​கம்​பாக்​கம் என மொத்​தம் 25 அன்​புச்​சோலை மையங்​கள் ரூ.10 கோடி மதிப்​பீட்​டில் தொடங்​கப்​படு​கின்​றன. இங்கு பொழுது​போக்கு அம்​சங்​கள், யோகா, நூல​கம் மற்​றும் முதி​யோ​ருக்​குத் தேவை​யான திறன் மேம்​பாடு சேவை​கள் வழங்​கப்பட உள்​ளன.

தமிழக அரசின் நிதி​யுத​வி​யுடன், மூத்த குடிமக்​களின் நலனுக்​கான பல்​வேறு அம்​சங்​கள் கொண்ட அன்​புச்​சோலை மையங்​கள் பகலில் மட்​டும் செயல்​படும். இந்த பராமரிப்பு மையங்​களில், முதி​யோர் தோழமை மற்​றும் அர்த்தமுள்ள செயல்​பாடு​களில் ஈடு​படலாம். இந்த அன்​புச்​சோலை மையத்​துக்கு மு​தி​யோர்​ சென்​றுவர ஏது​வாக, போக்​கு​வரத்​து வசதி​யுள்​ள இடங்​களில்​ இந்​த மையங்​கள்​ அமைக்​கப்​படுவது குறிப்​பிடத்​தக்​கது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "முதியோர்கள்தான் சமுதாயத்தின் வழிகாட்டும் சக்தி. இன்றைய தமிழ்நாட்டை உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் கண்ணியத்துடனும், பராமரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதை உறுதி செய்வது எமது கடமை.

அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்.

இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.

அன்புச்சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும். இது, கருணைமிக்க மற்றும் சமூக நீதியினை உள்ளடக்கிய தமிழ்நாட்டிற்கான எமது அரசின் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.