பரப்புரைக்கு நடுவே CSK மேட்ச் பார்த்து பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்துட்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (11-04-26) புதுக்கோட்டையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்துகுட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
இந்த பரபரப்பான சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரை வாகனத்தில் அமர்ந்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியை கண்டு வருகிறார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட favourite தோனியை miss பண்ற feeling avoid பண்ண முடியல! என பதிவிட்டுள்ளார்.