×

"உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட் 

 

 முத்தமிழறிஞர் கலைஞர்  எத்தனையோ நெருப்பாறுகளைக் கடந்து கட்டிக்காத்தார் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் , "1969-ஆம் ஆண்டு இதே நாளில் கழகத்திற்கு தலைவராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தையும் உடன்பிறப்புகளையும் நெஞ்சிலேந்தி எத்தனையோ நெருப்பாறுகளைக் கடந்து கட்டிக்காத்தார்!

உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். வெற்றி நம்முடன் இருக்கும்! என்றும் நிலைத்திருக்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.