இன்று ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
அதனைத் தொடர்ந்து கார் மூலம் இன்று இரவு ராமநாதபுரம் வரும் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இரவு தங்குகிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 54 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி அவரை வரவேற்கும் வகையில் பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை வழிநெடுக தி.மு.க. கொடி கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பார்த்திபனூர், பேராவூர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.