முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி பயணம்..!
முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (டிச. 25) செல்கிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சியில் இன்று (டிச. 25), நாளை (டிச. 26) ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு சென்று, அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஆட்சியரகக் கட்டடத்தை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வீரசோழபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்றத் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதியத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி கள்ளக்குறிச்சியில் இன்று (டிச. 25), நாளை (டிச. 26) ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.